கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது


கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 13 May 2023 6:45 PM GMT (Updated: 13 May 2023 6:46 PM GMT)

தியாகதுருகத்தில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டாா்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்:

தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையிலான போலீசார் மலையம்மன் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்றதாக புக்குளம் மந்தவெளி பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் கவுசி (வயது 19), இளங்கோவன் மகன் பரத் (19) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story