சாராயம் கடத்திய 2 வாலிபர்கள் கைது
மூங்கில்துறைப்பட்டு அருகே சாராயம் கடத்திய 2 வாலிபர்கள் கைது தப்பி ஓடிய இருவருக்கு போலீஸ் வலைவீச்சு
மூங்கில்துறைப்பட்டு
வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் புதுப்பட்டுபகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் மூட்டைகளுடன் வந்த 4 வாலிபர்களை போலீசார் வழிமறித்தனர். அப்போது மோட்டார் சைக்கிளுடன் மூட்டைகளை போட்டுவிட்டு 4 பேரும் தப்பி ஓடினர். உடனே போலீசார் அவர்களை விடாமல் துரத்தி சென்றனர். இதில் 2 பேர் பிடிபட்டனர். 2 பேர் தப்பி சென்றுவிட்டனர்.
விசாரணையில் பிடிபட்டவர்கள் சேராப்பட்டு ஏரிக்கரை கிராமத்தை சேர்ந்த முத்து மகன் செல்வமணி(வயது 21), நடேசன் மகன் விக்னேஷ்(18) என்பதும் தப்பி ஒடியவர்கள் சேராப்பட்டு மெயின் ரோட்டை சேர்ந்த தங்கராசு மகன் கார்த்திக்(25) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பதும் சேராப்பட்டு பகுதியில் இருந்து லாரி டியூப்களில் சாராயத்தை ஊற்றி பின்னர் அவற்றை சாக்குபையில் மூட்டையாக கட்டி கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து செல்வமணி, விக்னேசை கைது செய்த போலீசார் கடத்திவரப்பட்ட 500 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஏழுமலை, கார்த்திக் இருவரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.