மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தல் 2 வாலிபர்கள் கைது
புதுச்சேரியிலிருந்து மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தல் 2 வாலிபர்கள் கைது
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வந்த 2 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் புதுச்சேரி மது பாட்டில்கள் மற்றும் சாராயம் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தொரவி பனப்பாக்கத்தை சேர்ந்த அருண் பாண்டியன்(25), பாதிராப்புலியூர் நிர்மல்(19) என்பதும் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் மற்றும் சாராயத்தை கடத்தி விற்பனைக்காக கொண்டு செல்ல முயன்றபோது சிக்கியதும் தொியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 126 மது பாட்டில்கள், 10 லிட்டர் சாராயம் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.