மின்மோட்டார் திருடிய 2 வாலிபர்கள் கைது
மேல்மலையனூர் அருகே மின்மோட்டார் திருடிய 2 வாலிபர்கள் கைது
விழுப்புரம்
மேல்மலையனூர்
மேல்மலையனூர் அருகே அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அமலா(வயது 28). ஊராட்சி செயலாளரான இவர் நேற்று காலை ஊராட்சிக்கு சொந்தமான குடிநீர் கிணற்றை பார்வையிட சென்றார். அப்போது 2 மர்ம நபர்கள் அங்கிருந்த நீர்மூழ்கி மோட்டாரை திருடிக்கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் 2 மர்ம நபர்களையும் பிடித்து வளத்தி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் மேல்மலையனூர் அருகே கன்னலம் கிராமத்தை சேர்ந்த நாகமணி மகன் வீரமணி(20), தாயனூர் கிராமத்தை சேர்ந்த பரமேஷ் மகன் சந்துரு(20) என்பதும் தெரியவந்தது. இவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், மின்மோட்டார், 30 மீட்டர் ஒயர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.61 ஆயிரம் என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story