மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 7 May 2023 12:15 AM IST (Updated: 7 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி

திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே சின்னசெவலை பஸ் நிலைய பகுதியில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த தொட்டிகுடிசை கிராமத்தை சேர்ந்த சிவலிங்கம் மகன் ரகுபதி (வயது 22), பாஸ்கரன் மகன் சஞ்சய் (21) ஆகியோரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது, அவர்கள் மேலமங்கலம் கிராமத்தை சேர்ந்த சிவஞானம் என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, 2 பேரையும் போலீசார் கைது செய்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.


Next Story