மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது
x

ஆற்காட்டில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவின்படி ராணிப்பேட்டை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா மற்றும் ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மேற்பார்வையில் ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி மற்றும் போலீசார் ஆற்காடு பகுதியில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறவே போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர்கள் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த அஜித் என்ற அஜித்குமார் (வயது 23), வேலூர் பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் (24) என்பதும் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story