மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 26 Jun 2023 12:15 AM IST (Updated: 26 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது 5 வாகனங்கள் பறிமுதல்

விழுப்புரம்

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து மற்றும் போலீசார் முருகன், வீரராஜ், இளவரசன் ஆகியோர் மதுரப்பாக்கம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 2 பேரை மறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவா்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் கிடிக்குப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வேலூர் கோட்டை பின்புறம் பகுதியில் உள்ள சம்பத்நகரை சேர்ந்த தாமு என்ற தாமோதரன்(வயது 28), அசோக்குமார்(34) என்பதும் மோட்டாா் சைக்கிளை திருடி வந்ததும், விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தெரு, முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, வீடூர், கப்பியாம்புலியூர் ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து தாமோதரன், அசோக்குமார் ஆகியோரை கைது செய்த போலீசார் அவா்களிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.


Next Story