மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 27 Jun 2023 12:15 AM IST (Updated: 27 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனா்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையிலான போலீசார், விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள, வேலூர் சம்பத் நகர் பகுதியை சேர்ந்த சின்னபிச்சாண்டி மகன் விக்னேஷ் என்கிற சாரதி (வயது 25), வேலூர் நவநீத அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் விக்னேஷ் என்கிற கும்பப்பா (19) என்பதும், அவர்கள் இருவரும் விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம், தோகைப்பாடி உள்ளிட்ட இடங்களில் 4 பேரின் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த 4 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.


Next Story