கடலூர் அருகேசப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் வெட்ட முயன்ற 2 வாலிபர்கள் கைது
கடலூர் அருகே சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் வெட்ட முயன்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரெட்டிச்சாவடி,
கத்தியால் வெட்ட முயற்சி
கடலூர் அருகே உள்ள புதுக்கடை பகுதியில் வாலிபர்கள் 2 பேர் கைகளில் கத்தியை வைத்துக் கொண்டு பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபடுவதாக ரெட்டிச்சாவடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ரகளையில் ஈடுபட்ட வாலிபர்களை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் 2 பேரும் சப்-இன்ஸ்பெக்டரை பணி செய்யவிடாமல் தடுத்ததோடு, அவரை கத்தியால் வெட்ட முயன்றனர்.
பரபரப்பு
இதில் சுதாரித்துக் கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வாலிபர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில், அவர்கள் இருவரும் கடலூர் செல்லஞ்சேரி சேர்ந்த தேவா (வயது 26), விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கூனிமேட்டை சேர்ந்த சுமன் (27) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் புதுக்கடை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.