கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் சிக்கினர்


கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் சிக்கினர்
x

வாழைப்பந்தல் அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் சிக்கினார்கள்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிக்குமார் தலைமையில் போலீசார் கஞ்சா விற்பனையை தடுக்கும் பொருட்டு வாழைப்பந்தல் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட குப்பிடிச்சாத்தம் பஸ் நிறுத்தத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது செய்யாறு தாலுகா மேட்டுகாலனியை சேர்ந்த விக்னேஷ் (வயது 26) கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதேபோல் கலவை அப்பாதுரைபேட்டை பகுதியை சேர்ந்த அலி (33) என்பவர் கஞ்சா விற்றபோது அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story