வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
விக்கிரவாண்டியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது முக்கிய நபருக்கு போலீஸ் வலைவீச்சு
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் மற்றும் போலீசார் மதுரப்பாக்கம் பஸ்நிலையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 மர்ம நபர்களை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் விழுப்புரம் பூந்தோட்டத்தை சேர்ந்த பாலாஜி சிங்(25), விராட்டிகுப்பத்தை சேர்ந்த காசிம் பேக்(27) என்பதும், விக்கிரவாண்டி உஸ்மான்நகரை சேர்ந்த தொழிலாளி ஷேக் உசேனை வழிமறித்து அவரிடம் இருந்த செல்போன் மற்றம் பணத்தை பறித்துச்சென்றதையும் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து மொபட், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.