2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தூத்துக்குடியில் 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தூத்துக்குடியில் போக்சோ வழக்கில் கைதானவர் உள்பட 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
போக்சோ
ஸ்ரீவைகுண்டம் வெள்ளூரை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவருடைய மகன் சிவா என்ற சிவராமலிங்கம் என்ற பெரியவன் (வயது 31). இவரை ஒரு கொலை முயற்சி வழக்கில் ஸ்ரீவைகுண்டம் போலீசார் கைது செய்தனர். இதே போன்று சாத்தான்குளம் புதுக்குளம் காலனியை சேர்ந்த பேச்சிமுத்து மகன் தேவராஜ் (32) என்பவரை திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
குண்டர் சட்டம்
இவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிவா என்ற சிவராமலிங்கம் என்ற பெரியவன், தேவராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.






