2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

கொலை, சங்கிலி பறிப்பு வழக்கில் கைதான 2 வாலிபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

திண்டுக்கல்

திண்டுக்கல் முருகபவனம் பகுதியை சேர்ந்தவர் விஜய் வெள்ளைச்சாமி (வயது 24). கடந்த மாதம் 3-ந்தேதி இவர், அதே பகுதியில் வசிக்கும் தனது உறவினரை கழுத்தறுத்து படுகொலை செய்தார். இதுகுறித்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய் வெள்ளைச்சாமியை கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

இதேபோல் மதுரை பழங்காநத்தம் அருகே உள்ள முத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தனபாண்டி (23) என்பவர், கடந்த மே மாதம் 11-ந்தேதி பழனியில் ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துச்சென்ற வழக்கில் பழனி டவுன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய விஜய் வெள்ளைச்சாமி, தனபாண்டி ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அனுமதிக்கும்படி மாவட்ட கலெக்டர் விசாகனுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பரிந்துரை செய்தார். இதையடுத்து விஜய் வெள்ளைச்சாமி, தனபாண்டி ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதன் பேரில் இருவரையும் போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story