முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் சரிவு


முட்டை கொள்முதல் விலை 20 காசுகள்  சரிவு
x

நாமக்கல் மண்டலத்தில் தொடர்ந்து 2 நாட்களில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு 4 ரூபாய் 50 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

நாமக்கல்

முட்டை கொள்முதல் விலை

நாமக்கல் மண்டலத்தில் கடந்த 17-ந் தேதி 4 ரூபாய் 70 காசுகளுக்கு முட்டை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதனிடையே நேற்று முன்தினம் நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலையை 10 காசுகள் குறைக்கப்பட்டு 4 ரூபாய் 60 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், முட்டை கொள்முதல் விலையில் மீண்டும் 10 காசுகள் குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து முட்டை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.

20 காசுகள்

இதனிடையே வடமாநிலங்களில் பண்டிகை காலம் தொடங்க உள்ளதால் முட்டை கொள்முதல் விலை குறைக்கப்பட்டு வருவதாகவும், அதன் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் தொடர்ந்து 2 நாட்களில் 20 காசுகள் முட்டை கொள்முதல் விலையில் குறைக்கப்பட்டு இருப்பதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

அதேபோல் நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.123-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.85-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் ஏதும் இல்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.


Next Story