சாலையில் சுற்றித்திரிந்த 20 மாடுகள் பிடிப்பட்டன
வேலூர் மாநகராட்சி பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த 20 மாடுகள் பிடிப்பட்டன.
வேலூர்
வேலூர் மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றித்திரிவதாக கமிஷனர் ரத்தினசாமிக்கு புகார்கள் வந்தன.
அவரது உத்தரவின்பேரில் மாநகராட்சி பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை 4 மண்டலங்களிலும் சுகாதார அலுவலர்கள் தலைமையிலான மாநகராட்சி ஊழியர்கள் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சில மாடுகள் மிரண்டு அங்கும் இங்குமாக ஓடின. சிறிதுநேர சிரமத்துக்கு பின்னர் 4 மண்டலங்களில் 20 மாடுகள் பிடிப்பட்டன.
2 மாடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
மற்ற மாடுகள் மண்டல அலுவலக வளாகத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளன. மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு பின்னர் அவை ஒப்படைக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story