60 இடங்களில் 20-ந்தேதி உண்ணாவிரத போராட்டம்-எச்.ராஜா பேட்டி


60 இடங்களில் 20-ந்தேதி உண்ணாவிரத போராட்டம்-எச்.ராஜா பேட்டி
x

பெட்ரோல், டீசலுக்கான வரியை தமிழக அரசு குறைக்க வலியுறுத்தி 20-ந் தேதி தமிழகத்தில் 60 இடங்களில் உண்ணாவிரதம் நடைபெறும் என்று எச்.ராஜா கூறினார்.

சிவகங்கை

சிவகங்கை

பெட்ரோல், டீசலுக்கான வரியை தமிழக அரசு குறைக்க வலியுறுத்தி 20-ந் தேதி தமிழகத்தில் 60 இடங்களில் உண்ணாவிரதம் நடைபெறும் என்று எச்.ராஜா கூறினார்.

பேட்டி

பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா சிவகங்கையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாரதீய ஜனதா கட்சி ஒரு கோரிக்கை வைத்துள்ளது. தி.மு.க. அதன் தேர்தல் அறிக்கையில் சொன்னதை நிறைவேற்ற வேண்டும். இதுவரை பெட்ரோல், டீசலை ஒரு பெரிய அரசியல் விஷயமாக எதிர்க்கட்சிகள் பயன்படுத்தின. மன்மோகன் சிங் ஆட்சியில் பெட்ரோலிய பொருட்களுக்கு மானியம் கொடுப்பதற்காக ரூ.3½ லட்சம் கோடி கடன் வாங்கினார்கள். 2004-ல் பா.ஜ.க. ஆட்சியை விட்டு இறங்கும்போது பெட்ரோல் விலை ரூ.35. ஆனால் 2014-ல் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75. இன்று பெட்ரோல் விலை 103 ரூபாய் உள்ளது. அவர்கள் ஆட்சியில் பெட்ரோல் விலை 2 மடங்காக்கியது. ரூ.35 என்பது ரூ.75 ஆகிவிட்டது. அந்த ரூ.75 இன்று ரூ.150 ஆகவில்லை. ரூ.103 ஆக தான் உள்ளது.

பெட்ரோல்-டீசல்

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலை ரூ.5 குறைக்கப்படும் என்று கூறினார்கள். தற்போது 3 ரூபாய் குறைத்துள்ளார்கள். மீதமுள்ள 2 ரூபாயையும் அவர்கள் தேர்தல் அறிக்கையில் கூறியபடி குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க 30 நாட்கள் அவகாசம் கொடுத்து உள்ளோம். அவ்வாறு குறைக்க வில்லை என்றால் வருகிற 20-ந்தேதி தமிழகத்தில் 60 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். 30-ந்தேதி சென்னையில் பேரணி நடத்தப்படும். உள்ளாட்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் பிரதமர் மோடி ஒவ்வொருவரின் கணக்கிற்கும் ரூ.15 லட்சம் தர வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் பிரதமர் கூறியதை புரிந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது. வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை எடுத்தால் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்த முடியும் என்று தான் கூறியுள்ளார். எங்கேயாவது பிரதமர் ரூ.15 லட்சம் தருவதாக கூறியுள்ளார் என்பதை பெரியகருப்பன் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகுகிறேன். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி, விவசாய அணி மாநில துணைத்தலைவர் சசி ராம்குமார் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் பெருமாள் சோழன், பழனிச்சாமி, எஸ்.ஆர். தேவர், சிவகங்கை நகர் தலைவர் உதயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story