விழுப்புரம் மாவட்டத்தில்20 துணை தாசில்தார்கள் தாசில்தாராக பதவி உயர்வுமுதுநிலை வருவாய் ஆய்வாளர்களும் பதவி உயர்வு பெற்றனர்


விழுப்புரம் மாவட்டத்தில்20 துணை தாசில்தார்கள் தாசில்தாராக பதவி உயர்வுமுதுநிலை வருவாய் ஆய்வாளர்களும் பதவி உயர்வு பெற்றனர்
x
தினத்தந்தி 22 Aug 2023 12:15 AM IST (Updated: 22 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் 20 துணை தாசில்தார்கள் தாசில்தாராக பதவி உயர்வு பெற்றுள்னர். அதேபோல் முதுநிலை வருவாய் ஆய்வாளர்களும் பதவி உயர்வு பெற்றனர்.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தேர்தல் பிரிவு துணை தாசில்தாராக பணியாற்றி வந்த தனலட்சுமி பதவி உயர்வு பெற்று செஞ்சி ஆதிதிராவிடநல தனி தாசில்தாராக நியமனம் செய்யப்பட்டார்.

அதேபோன்று, திருவெண்ணெய்நல்லூர் தலைமையிடத்து துணை தாசில்தார் செந்தில்குமார் பதவி உயர்வு பெற்று விழுப்புரம் ஆதிதிராவிட நல தனி தாசில்தாராகவும், மேல்மலையனூர் தலைமையிடத்து துணை தாசில்தார் துரைச்செல்வன் பதவி உயர்வு பெற்று செஞ்சி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

மேலும், மரக்காணம் தலைமையிடத்து துணை தாசில்தார் ஏழுமலை பதவி உயர்வு பெற்று மரக்காணம் தேசிய நெடுஞ்சாலை நிலஎடுப்பு தனி தாசில்தாராகவும், மேல்மலையனூர் வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணதாஸ் திண்டிவனம் முத்திரைத்தாள் தனி தாசில்தாராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

விக்கிரவாண்டி, திண்டிவனம்

இதேபோல் மாவட்ட கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் கனிமொழி, திருவெண்ணெய்நல்லூர் தேர்தல் துணை தாசில்தார் வித்யாதரன், விக்கிரவாண்டி மண்டல துணை தாசில்தார் யுவராஜ், செஞ்சி வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன், திண்டிவனம் மண்டல துணை தாசில்தார் ராஜசேகர், கண்டாச்சிபுரம் தே்ரதல் பிரிவு துணை தாசில்தார் ரமேஷ் இவர்கள் உள்பட மொத்தம் 20 பேர் பதவி உயர்வு பெற்று மாவட்டத்திற்குள் வெவ்வேறு இடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும் முதுநிலை வருவாய் ஆய்வாளர்களாக பணியாற்றி வந்த மலர்விழி, சித்தார்த்தன், ஆறுமுகம், கணேசன், அக்தர்ஜெகன், வேல்முருகன், சொர்ணாம்பிகை உள்ளிட்ட 19 பேர் துணை தாசில்தாராக பதவி உயர்வு பெற்று மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் சி.பழனி பிறப்பித்துள்ளார்.


Next Story