சாலையில் சுற்றித்திரிந்த 20 நாய்கள் பிடிக்கப்பட்டது
நெல்லையில் சாலையில் சுற்றித்திரிந்த 20 நாய்கள் பிடிக்கப்பட்டது.
திருநெல்வேலி
நெல்லை டவுன் பகுதியில் அதிக அளவு நாய்கள் சுற்றித் திரிவதாகவும், இதனால் சிறுவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் சாலையில் நடமாட அச்சப்படுவதாகவும் மாநகராட்சி ஆணையாளருக்கு புகார் மனுக்கள் வந்தன. இதையடுத்து ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் நெல்லை டவுன் பகுதியில் சுற்றித் திரிந்த நாய்கள் நேற்று பிடிக்கப்பட்டது.
இதில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் உதவியுடன் நெல்லை டவுன் பாட்டப்பத்து, அரசன்நகர், கிருஷ்ணபேரி, பெரியதெரு, நடுத்தெரு, குற்றாலம் ரோடு, ஆசாத்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் சுற்றித் திரிந்த 20-க்கும் மேற்பட்ட நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்றனர்.
Related Tags :
Next Story