சாலை மறியலில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் 20 பேர் கைது


சாலை மறியலில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் 20 பேர் கைது
x

கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

சென்னையில் கடந்த மாதம் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்து முன்னணியின் மாநில கலை பண்பாட்டு பிரிவின் தலைவரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல்கண்ணன் பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதனால் கனல் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து கரூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் வெங்கமேடு விநாயகர் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் முன்னெச்சரிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில் மாவட்ட பொருளாளர் ரமேஷ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த இந்து முன்னணியினர் வந்திருந்தனர். ஆனால் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி அளிக்காததால் இந்து முன்னணியினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், இந்து முன்னணியினர் 20 பேரை கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story