திருக்கோவிலூரில் ஒரே நாளில் 20 முறை மின்வெட்டு பொதுமக்கள் அவதி.


திருக்கோவிலூரில் ஒரே நாளில் 20 முறை மின்வெட்டு பொதுமக்கள் அவதி.
x
தினத்தந்தி 3 Jun 2023 12:15 AM IST (Updated: 3 Jun 2023 12:24 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூரில் ஒரே நாளில் 20 முறை மின்வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் திருக்கோவிலூரில் நேற்று அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் மின்விசிறி, ஏசி உள்ளிட்டவற்றை இயக்க முடியாத நிலை ஏற்பட்டதால், புழுக்கத்தால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், திருக்கோவிலூரில் நேற்று ஒரே நாளில் 20-க்கும் மேற்பட்ட முறை மின்வெட்டு ஏற்பட்டது. குறிப்பாக இரவு 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் மட்டும் 9 முறை மின்வெட்டு ஏற்பட்டது. நேற்று முன்தினம் சுமார் 5 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டால் நாங்கள் பெரும் அவதி அடைந்து வருகிறோம். மின்வெட்டு குறித்து கேட்டால் மின்வாரிய அதிகாரிகள் உரிய பதிலை அளிப்பதில்லை. இதனால் நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறோம். திடீர், திடீரென மின்சாரம் வருவதும், போவதுமாக இருப்பதால் எங்களது வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் பழுதடைந்து வருகின்றன. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story