தூத்துக்குடியில் 20 கடை உரிமையாளர்களுக்கு அபராதம்


தூத்துக்குடியில் 20 கடை உரிமையாளர்களுக்கு அபராதம்
x

தூத்துக்குடியில் அச்சிட்ட தாளில் உணவு பண்டங்களை விற்பனை செய்த 20 கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோடு, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக ஆய்வு செய்தனர். அப்போது, உணவு பண்டங்களை அச்சிட்ட தாள்களில் வழங்கிய 20 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து உணவு வணிகர்கள் எவரேனும் அச்சிட்ட தாள்களில் வடை, பஜ்ஜி போன்ற உணவுப் பொருட்களை பார்சல் செய்வதோ அல்லது சாப்பிட வழங்குவதோ கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story