இரும்பு கடையில் ரூ.20 ஆயிரம்திருடிச்சென்ற வாலிபர்


இரும்பு கடையில் ரூ.20 ஆயிரம்திருடிச்சென்ற வாலிபர்
x
தினத்தந்தி 9 Aug 2023 12:15 AM IST (Updated: 9 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழியில் பொருட்கள் வாங்குவதுபோல் நடித்து இரும்பு கடையில் ரூ.20 ஆயிரத்தை திருடிச்சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழியில் பொருட்கள் வாங்குவதுபோல் நடித்து இரும்பு கடையில் ரூ.20 ஆயிரத்தை திருடிச்சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பொருட்கள் வாங்குவதுபோல்...

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே விளந்திடசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 61). இவர் சிதம்பரம்-சீர்காழி பிரதான சாலையில் பாதரக்குடி என்ற இடத்தில் இரும்பு கம்பி, சிமெண்டு விற்பனை செய்து வருகிறார். நேற்று இவரது கடைக்கு பிளாஸ்டிக் பைப் வாங்குவது போல் ஒரு வாலிபர் வந்தார்.

அப்போது பொருட்களின் விலையை கேட்டுக்கொண்டு கடையில் அமர்ந்து உள்ளார். அப்போது கடை உரிமையாளர் சேகர், சிமெண்டு மூட்டைகளை வாகனத்தில் ஏற்றுவதை கண்காணித்து கொண்டிருந்தார்.

ரூ.20 ஆயிரம் திருட்டு

சிறிது நேரம் கழித்து கடைக்கு திரும்பியபோது, அந்த வாலிபரை காணவில்லை. உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டி திறந்து கிடந்தது. அதில் இருந்த ரூ.20 ஆயிரம் இல்லாததை கண்டு சேகர் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அருகிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story