வாலிபருக்கு 20 ஆண்டு சிறை


வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
x
திருப்பூர்


திருப்பூர் பாளையக்காடு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 25). பனியன் நிறுவன தொழிலாளி. இவர் 14 வயது மாணவியை காதலிப்பதாக கூறி ஏமாற்றி கடந்த 3-10-2022 அன்று பாலியல் வன்கொடுமை செய்தார். அந்த மாணவி ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயாரிடம் கூற தெற்கு மகளிர் போலீசார் போக்சோ மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. பிரபாகரனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.3,500 அபராதம் விதித்து நீதிபதி பாலு தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.


Next Story