பேரணி நடத்த முயன்ற பா.ஜ.க.வினர் 200 பேர் கைது
இடிகரை
மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பேரணி நடத்த முயன்ற பா.ஜ.க.வினர் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
இருசக்கர வாகன பேரணி
8 ஆண்டுகளில் மக்கள் தொண்டு, ஏழைகளின் நலன் என்ற தலைப் பில் மோடி அரசின் சாதனைகளை விளக்கி கடந்த 15 நாட்களாக தமிழ்நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட வடக்கு பா.ஜ.க. சார்பாக பெரியநாயக்கன்பாளையத்தில் மோடி அரசின் 8 ஆண்டு சாதனைக ளை விளக்கி இரு சக்கர வாகனங்களில் பேரணி நடத்தி நோட்டீஸ் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
போலீசார் தடுத்தனர்
இதற்கு வடக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் யோகேஸ் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் கனகசபாபதி, விவ சாய அணி மாநில தலைவர் நாகராஜ், வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தார். இதில், பொதுச் செய லாளர்கள் சுபாஸ் சந்திரபோஸ், செல்வராஜ், மாவட்ட செயலாளர் சவுந்திரராஜ், மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் சிவ சங்கரி உள்பட 250-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்.
இதை அறிந்த கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். பா.ஜ.க.வினரிடம் இருசக்கர வாகன பேரணிக்கு அனுமதி பெற வில்லை என்று போலீசார் கூறினர். அதை மீறி பேரணியாக செல்ல முயன்ற பா.ஜ.க.வினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
சாலை மறியல்
இதைத்தொடர்ந்து பா.ஜ.க.வினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததால் பா.ஜ.க.வினர் சாலையில் அமர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. வினர் 200-க்கும் மேற்பட்டோரை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலை 7 மணியளவில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.