200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x

200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது

மதுரை


மதுரையில் போதை பொருட்களான கஞ்சா, புகையிலை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் தீவிர ரோந்து சென்று கஞ்சா, புகையிலை விற்பவர்களை கைது செய்து வருகிறார்கள். இந்த நிலையில் தெப்பக்குளம் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அனுப்பானடி பகுதியில் உள்ள ஒரு கடையில் புகையிலை பொருட்களை விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த கடையில் இருந்த 200 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடை உரிமையாளர் ரத்தினவேல்பாண்டியன் (வயது 40) என்பவரை கைது செய்தனர். மேலும் அலங்காநல்லூர் பஸ் நிலைய பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரை மறித்து சோதனையிட்ட போது ரூ.22 ஆயிரம் மதிப்பில் புகையிலை பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஊமச்சிக்குளத்தை சேர்ந்த அருண்குமார் (29) என்பவரை போலீசார் கைது செய்து, காரையும், புகையிலையையும் பறிமுதல் செய்தனர்.


Next Story