200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கோவை
தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை கூடுதல் இயக்குனர் அருண் பொறுப்பேற்ற பிறகு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக கோவை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் மேனகா தலைமையில் நேற்று காலை துடியலூர் தெற்குபாளையம் தனியார் பள்ளி அருகே வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அதில் அவர், வேலாண்டிபாளையம் கோவில்மேடு நல்லம்மாள் வீதியை சேர்ந்த ரவி என்பவரின் மகன் கார்த்திகேயன் (வயது 28) என்பதும், தெற்கு பாளையம் பகுதியில் பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் வடமாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் கைதுசெய்தனர். அத்துடன் அவரிடம் இருந்து 200 கிலோ ரேஷன் அரிசி மற்றும் ஒரு மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.