மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் 200 பேர் கைது
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
போராட்டம்
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நரிக்குடி யூனியன் இளநிலை என்ஜினீயர் பெரோஸ்கான் மாவட்ட நிர்வாகத்தால் பணி விடுவிப்பு செய்ததை கண்டித்து மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் 3 நாட்களாக கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனைத்தொடர்ந்து மாநில சங்க தலைமையின் ஆலோசனையின் பேரில் நேற்று மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
200 பேர் கைது
இதனைத்தொடர்ந்து சங்க நிர்வாகிகள், ஊரக வளர்ச்சி முகமை இயக்குனர் மற்றும் கலெக்டருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனாலும் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு மாநில செயலாளர் செல்வகுமார் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 60 பெண்கள் உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.