அரவைக்காக 2,000 டன் நெல்


அரவைக்காக 2,000 டன் நெல்
x
தினத்தந்தி 12 July 2023 7:37 PM GMT (Updated: 13 July 2023 11:49 AM GMT)

அரவைக்காக 2,000 டன் நெல்

தஞ்சாவூர்

தஞ்சையில் விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும் புனல்குளம், பிள்ளையார்பட்டி உள்ளிட்ட சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2 ஆயிரம் டன் நெல், 240 லாரிகளில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டன. பின்னர் சரக்கு ரெயிலில் 42 வேகன்களில் நெல்மூட்டைகள் ஏற்றப்பட்டு அரவைக்காக கிருஷ்ணகிரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


Related Tags :
Next Story