2017–ம் ஆண்டு பிறந்தது:கோவில்கள், ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

2017–ம் ஆண்டு பிறந்தது:கோவில்கள், ஆலயங்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 1 Jan 2017 12:00 AM IST (Updated: 1 Jan 2017 12:00 AM IST)
t-max-icont-min-icon

புத்தாண்டையொட்டி நள்ளிரவு 12 மணி முதல் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகியது. பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் வண்ண கோலமிட்டு புத்தாண்டை இனிதாக வரவேற்றனர். செல்போன்கள் மூலம் வாழ்த்துகளை தங்களுடைய நண்பர்கள், உற்றார், உறவினர்களுக்கு அனுப்பி வைத்து மகிழ்ந்த காட்சிகளை பார்க்க முடிந்தது. புத்தாண்டின் முக்கிய அம்சமாக, கோவில்களிலும், ஆலயங்களிலும் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

சந்தோ‌ஷங்களையும், சோகங்களையும் சுமந்து வந்த 2016–ம் ஆண்டு நிறைவுபெற்று 2017–ம் ஆண்டு பிறந்தது.

புத்தாண்டையொட்டி  நள்ளிரவு 12 மணி முதல் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகியது. பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் வண்ண கோலமிட்டு புத்தாண்டை இனிதாக வரவேற்றனர். செல்போன்கள் மூலம் வாழ்த்துகளை தங்களுடைய நண்பர்கள், உற்றார், உறவினர்களுக்கு அனுப்பி வைத்து மகிழ்ந்த காட்சிகளை பார்க்க முடிந்தது. புத்தாண்டின் முக்கிய அம்சமாக, கோவில்களிலும், ஆலயங்களிலும் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

சென்னை பெசண்ட்நகர்,மெரினா கடற்கரையில் இளைஞர்கள் உற்சாக கொண்டாடி புத்தாண்டை வரவேற்றனர்.  2017 ஆங்கில புத்தாண்டு பிறந்ததையொட்டி தமிழகத்தில் புத்தாண்டு களை கட்டியது.

மதுரை,நெல்லை,கோவை,திருச்சி உள்ளிட்ட இடங்களிலும் பொதுமக்கள் புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்றனர். பட்டாசுகள் வெடித்தும் கேக் வெட்டி கொண்டாடினர். புதுச்சேரியிலும் புத்தாண்டு களைகட்டியது. புத்தாண்டு பிறந்ததையொட்டி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

இதேபோல் கிறிஸ்தவ தேவாலயங்கள் அனைத்திலும் இரவு முதல் 2016–ம் ஆண்டிற்கான நன்றி அறிவிப்பு பிரார்த்தனையும், சரியாக 12.01 மணிக்கு புத்தாண்டு பிரார்த்தனையும் நடந்தது. கடந்த ஆண்டுக்காக நன்றி தெரிவித்தும், புத்தாண்டில் பல ஆசிகள் வழங்க வேண்டியும் பாதிரியார்கள் பிரார்த்தனை செய்தனர். 

குறிப்பாக பெசன்ட்நகர் வேளாங்கண்ணி கத்தோலிக்க திருத்தலத்தில் பங்கு தந்தை பி.கே.பிரான்சிஸ் சேவியர், பாதிரியார்கள் ஜூடு ராஜேஷ், அமல்ராஜ், பேட்ரிக் பால், ஆல்பர்ட் ஜூடு ஆகியோர் தலைமையில் பிரார்த்தனை நடந்தது.

Next Story