போராட்டத்தை கைவிடுவது குறித்து நெடுவாசல் மக்கள் முடிவு செய்வார்கள் முதல்வரை சந்தித்து போராட்டக் குழு பேட்டி


போராட்டத்தை கைவிடுவது குறித்து நெடுவாசல் மக்கள் முடிவு செய்வார்கள் முதல்வரை சந்தித்து போராட்டக் குழு பேட்டி
x
தினத்தந்தி 1 March 2017 9:07 AM GMT (Updated: 1 March 2017 9:06 AM GMT)

நெடுவாசல் மக்கள் போராட்டத்தை தொடர்வதா அல்லது முடித்துக் கொள்வதா என்பதை நெடுவாசலில் போராடும் மக்கள் முடிவு செய்வார்கள் என்று போராட்டக் குழுவினர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

சென்னை

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தப் பின்னர் 11 பேர் கொண்ட நெடுவாசல் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் வேலு செய்தியாளர்களிடம் பேசியதாவது:

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அறவே ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வரிடம் கேட்டுக் கொண்டோம், அவர் ஏற்கனவே மோடியை சந்தித்த போது இதுகுறித்து பேசியுள்ளதாக கூறியுள்ளார். இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்த உறுதி அளித்தார் முதல்வர். இந்தத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி தராது என்றும் முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

நானும் ஒரு விவசாயி, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என முதலமைச்சர் உறுதியளித்தார்.எங்களிடம் வழங்கிய உறுதிமொழியை அறிக்கையாக வெளியிடப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு வர்த்தக உற்பத்திக்கான அனுமதியையும் மாநில அரசு வழங்காது என முதல்வர் தெரிவித்துள்ளார். விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்திற்கும் மாநில அரசு அனுமதி வழங்காது என்றும் முதல்வர் உறுதி அளித்துள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆய்வு நிலையிலேயே உள்ளதாக முதலமைச்சர் தகவல்

முதல்வர் கொடுத்த வாக்குறுதியை நெடுவாசலில் போராடும் மக்களிடம் எடுத்துச் சொல்வோம். அவர்கள் போராட்டத்தை தொடர்வதா அல்லது நிறுத்துவதா என்பதை அவர்கள்தான் முடிவெடுப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story