ஜெயலலிதா மரணம் விசாரணை கோரி உண்ணாவிரதம் இருந்த போலீஸ்காரர் கைது


ஜெயலலிதா மரணம் விசாரணை கோரி உண்ணாவிரதம்  இருந்த போலீஸ்காரர் கைது
x
தினத்தந்தி 1 March 2017 9:33 AM GMT (Updated: 1 March 2017 9:32 AM GMT)

கூடலூர் பென்னிகுயிக் மணிமண்டபத்தில் உண்ணாவிரதம் இருந்த சஸ்பெண்டு செய்யப்பட்ட போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

கூடலூர்,


தேனி மாவட்டம் ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் போலீஸ் காரராக பணியாற்றியவர் வேல்முருகன். இவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் விசுவாசியாக இருந்து வந்தார். அரசு பணியில் இருந்து கொண்டு சர்ச்சைக்குரிய விதத்தில் செயல்பட்டு வந்ததால் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

இதனால் இன்று அவர் தேனி மாவட்டம் கூடலூர் லோயர் கேம்ப்பில் உள்ள பென்னிகுயிக் மணிமண்டபத்தில் உண்ணாவிரத போராட்டம்  நடத்தினார். இது குறித்து தகவல் வந்ததும் லோயர் கேம்ப் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

இங்கு போராட்டம் நடத்தக்கூடாது என்று தெரிவித்தனர். ஆனால் அதனையும் மீறி அவர் போலீஸ் உடையில் போராட்டத்தில் ஈடுபட்ட தால் போலீசார் அவரை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story