பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு 70 ஆயிரம் கோடி மதிப்புக்கு கருப்பு பணம் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்


பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு 70 ஆயிரம் கோடி மதிப்புக்கு கருப்பு பணம் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்
x
தினத்தந்தி 3 March 2017 5:14 AM GMT (Updated: 3 March 2017 5:13 AM GMT)

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு 70 ஆயிரம் கோடி மதிப்புக்கு கருப்பு பணம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாக்,

அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் 70 ஆயிரம் கோடி மதிப்பிலான கருப்பு பணம் கண்டறியப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவின் துணைத்தலைவர் அர்ஜித் பசயத் தெரிவித்துள்ளார்.மேலும், ஆறாவது இடைக்கால அறிக்கை வரும் ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

70 ஆயிரம் கோடியில் 16 ஆயிரம் கோடி மதிப்புடைய பணம் வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தொடர்பான விசரணைக்கு பிறகு கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பொருளாதாரம் மற்றும் நிதி விவகாரங்களை கண்காணித்து வரும் பல்வேறு அரசு முகமைகளுடன் கட்டாக்கில் ஆலோசனை நடத்திய நீதிபதி பசயாத், வரும் எப்ரல் முதல் வாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு தனது 6- அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் என்றார். 

மேலும், சிறப்பு புலனாய்வு குழுவின் பெரும்பாலான பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொண்டதாக தெரிவித்த அவர், சில பரிந்துரைகள் பற்றி ஆலோசனை நடத்தப்படுவதாகவும் கூறினார். 15 லட்சம் அல்லது அதற்கு மேல் பணத்தை ரொக்கமாக வைத்திருப்பது கணக்கில் காட்டாத பணமாக கருதப்படும் என்று எங்களின் ஒரு திட்டத்தை அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், 3 லட்சத்திற்கு மேல் ரொக்க பரிவர்த்தனை கூடாது என்ற சிறப்பு புலனாய்வு குழுவின் ஒரு பரிந்துரையை அரசு ஏற்கனவே நடைமுறைப்படுத்திவிட்டது.

மாநில அளவில் தனியார் கல்வி நிறுவனங்கள், நகைக்கடைகள், ரியல் எஸ்டேட், சாமியார்கள், மாபியா ரவுடிகள், ஆகியோர்களின் தவறான செயல்களை கண்காணித்து விசாரிக்குமாறு மாநில குற்றப்பிரிவை கேட்டுக்கொள்கிறோம். இந்த விசாரணையில் வெளி வரும் தகவல்களை முழு விசாரணைக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறையிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Next Story