நடத்தையில் சந்தேகம் மனைவியின் முகத்தை தீயில் கருக்கிய கொடுமை


நடத்தையில் சந்தேகம் மனைவியின் முகத்தை தீயில் கருக்கிய கொடுமை
x
தினத்தந்தி 3 March 2017 9:38 AM GMT (Updated: 3 March 2017 10:02 AM GMT)

மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு அவர் முகத்தை தீயீட்டு காயப்படுத்திய கணவனின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது


ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் அருகில் உள்ல கிராமத்தை சேர்ந்தவர் பக்கா கெமதி . இவர் மனைவி ஜமகு  (22).

இரு தினங்களுக்கு முன்னர் ஜமகு செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அழைப்பை எடுத்து அவர்  பேசியுள்ளார்.
அப்போது அங்கு வந்த கண்வர் கெமதியும் அவரது  தந்தை லெக்ரி லாலும் ஜமகுவிடம் இருந்து செல்போனை வலுக்கட்டாயமாக பிடுங்கி உள்ளனர்.

பின்னர், எதிர் முனையில் போன் செய்த நபர் யார் என தெரிந்து கொள்ள அவர்கள் முயற்சித்துள்ளனர். பின்னர் அது முடியாமல் போகவே ஜமகுவுக்கு வேறு ஒரு ஆணுடன் தவறான தொடர்பு உள்ளது எனவும் அவருடன் தான் ஜமகு  போனில் பேசியுள்ளார் என இருவரும் சந்தேகப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேகம் ஆத்திரமாக மாற கெமதி  தனது மனைவியை கமபால் அடித்துள்ளார். பின்னர், மனைவி முகம், கால், மார்பு ஆகிய பகுதிகளில் இரக்கமின்றி தீவைத்து கொளுத்தியுள்ளார்.

வலியால் துடித்த மனைவி பின்னர் காயங்களுக்காக மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையில் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுப்பட்ட கெமதி  தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்கு பின்னர் இதற்கு உறுதுணையாக இருந்த கெமதியின் தந்தையும் கைது செய்யப்படுவார் என தெரிகிறது. 

Next Story