தமிழக உள்துறை செயலாளர் அபூர்வா வர்மா சுற்றுலாத்துறைக்கு மாற்றம்


தமிழக உள்துறை செயலாளர் அபூர்வா வர்மா சுற்றுலாத்துறைக்கு மாற்றம்
x
தினத்தந்தி 3 March 2017 4:09 PM GMT (Updated: 3 March 2017 4:09 PM GMT)

தமிழக உள்துறை செயலாளர் அபூர்வா வர்மா சுற்றுலா துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய உள்துறை செயலாளராக நிரஞ்சன் மார்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

தமிழக உள்துறை செயலாளாராக இருந்து வரும் அபூர்வா வர்மா தமிழக சுற்றுலாத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய உள்துறை செயலாளராக நிரஞ்சன் மார்டியை நியமனம் செய்து கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டார். தமிழ்நாடு சிறுதொழில் நிறுவன மேம்பாட்டு கழக இயக்குநராக அபூர்வா வர்மா செயல்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமிழ்நாடு மருத்துவசேவை கழக நிர்வாக இயக்குநராக உமாநாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Next Story