ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது: பன்னீர்செல்வம் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்


ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது: பன்னீர்செல்வம் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்
x
தினத்தந்தி 1 April 2017 7:28 AM GMT (Updated: 1 April 2017 7:28 AM GMT)

ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது என பன்னீர்செல்வம் குற்றச்சாட்டுக்கு சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்துள்ளார்.

சென்னை

சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

முதலமைச்சராக இருந்த பன்னீர்செல்வம் கூறி நாங்கள் கேட்கவில்லை என கூறுவது வியப்பாக உள்ளது. முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவது வேதனை அளிக்கிறது.

ஜெயலலிதாவை அமெரிக்கா கொண்டு சிகிச்சை அளிக்க நான் மறுத்துவிட்டதாக பன்னீர்செல்வம் கூறியதில் உண்மையில்லை. என்னை ஆல் ரவுண்டர் என்கிறார்.நான் ஆல்ரவுண்டர்தான் கிரிக்கெட்டில் பேட்டிங் பந்து வீச தெரிந்தவன். ஆனால்  பன்னீர்செல்வம்  கேப்டனாக இருந்து கொண்டு  மேட் பிக்சிங்கில் ஈடுபட்டு உள்ளார்.அரசியலில் மேட்ச் பிக்ஸிங் செய்கிறார் பன்னீர்செல்வம்.,

பன்னீர்செல்வம் தோல்வி பயத்தில்  விரக்தியில் தவறான கருத்தை கூறி வருகிறார். பன்னீர்செல்வம் பதவியில் இருக்கும் போது ஏன் இதுபோன்ற சந்தேகங்கள், கேள்விகள் எழுப்பவில்லை என மக்களே கேட்கிறார்கள். பதவி கிடைக்காத விரக்தியில் குழம்பிப் போய் ஓ.பன்னீர்செல்வம் தவறான தகவல்களை கூறி வருகிறார்.

ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க வேண்டியது குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆளுநரிடம் கூறியிருக்கலாமே.இவ்வாறு அவர் கூறினார்.

Next Story