விஜயகாந்த், மருத்துவ சிகிச்சை முடிந்து இல்லம் திரும்பினார்
தேமுதிக தலைவர் விஜயகாந்த், மருத்துவ சிகிச்சை முடிந்து இன்று காலை 9 மணிக்கு இல்லம் திரும்பினார்.
சென்னை,
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த மார்ச் 22-ந்தேதி நள்ளிரவு சிகிச்சைக்காக ‘மியாட்’ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்குத்தான் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தே.மு.தி.க தலைமை கழகம் அறிக்கை வெளியிட்டது.
அதன் பிறகு பிரேமலதா விஜயகாந்த் அளித்த பேட்டியில், விஜயகாந்த் நலமாக உள்ளார், ஆண்டு தோறும் மேற்கொள்ளும் பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விரைவில் ஆர்.கே.நகரில் தேர்தல் பிரசாரம் செய்வார் என்றார்.
இந்த நிலையில் 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் விஜயகாந்த் குணம் அடைந்தார். இன்று காலை 9 மணிக்கு வீடு திரும்பினார். சில நாட்கள் அவர் வீட்டில் ஓய்வு எடுத்த பின்பு ஆர்.கே.நகரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.
Next Story