இலங்கையில் ஏப்ரல் 7ம்தேதி மீனவர்கள் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது


இலங்கையில் ஏப்ரல் 7ம்தேதி மீனவர்கள் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது
x
தினத்தந்தி 4 April 2017 6:48 PM IST (Updated: 4 April 2017 7:15 PM IST)
t-max-icont-min-icon

இலங்கையில் ஏப்ரல் 7ம்தேதி மீனவர்கள் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

கொழும்பு,

எல்லை கடந்து மீன்பிடிப்பதில் இந்தியா மற்றும் இலங்கை மீனவர்கள் இடையே நீண்டகால பிரச்னை இருந்து வருகிறது.  இந்திய மீனவர்கள் எல்லை கடந்து மீன்பிடிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வருகின்றனர்.

இதனை தடுக்கவும், இரு நாட்டினரும் கடல் எல்லையினை சுமுக முறையில் பயன்படுத்தி கொள்ளவும் பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.  அதன்படி கடந்த மார்ச்சில் 3வது கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.

இந்நிலையில், இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் இடையே கொழும்பு நகரில் வருகிற ஏப்ரல் 7ந்தேதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது என தகவல் தெரிவிக்கிறது.

இந்த பேச்சுவார்த்தையில், எல்லை கடந்து மீன்பிடிப்பதில் உள்ள பிரச்னை பற்றி பேசப்படும் என கூறப்படுகிறது.  இதேபோன்று இரட்டை மடிமீன் வலைகளை பயன்படுத்த கூடாது என்றும் கோரிக்கையாக வைக்கப்பட உள்ளது.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் கொடுந்தாக்குதல்கள், சிறைபிடிப்பு மற்றும் இலங்கை அதிகாரிகளால் மீன்பிடி படகுகள், உபகரணங்களை பறிமுதல் செய்தல் போன்ற நடவடிக்கைகளை கைவிட கோரப்படும் என கூறப்படுகிறது.

Next Story