முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அ.தி.மு.க. அம்மா அணி எம்.எல்.ஏ.க்கள் 2–ம் நாள் சந்திப்பு
முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. அம்மா அணி எம்.எல்.ஏ.க்கள் 2–ம் நாளாக நேற்று சந்தித்து பேசினர்.
சென்னை,
ஆளும் கட்சியான அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை தலைமை செயலகத்துக்கு மாவட்ட ரீதியாக வரவழைத்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து கோரிக்கைகளை கேட்டு அறிகிறார்.
அந்த வகையில் நேற்று முன்தினம் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினர்.
மதுரை, நெல்லைஇந்த நிலையில் நேற்றும் எம்.எல்.ஏ.க்களுடனான முதல்–அமைச்சரின் சந்திப்பு தொடர்ந்தது. நேற்று சந்தித்து பேசியவர்கள் பற்றிய விவரம் வருமாறு:–
ராமநாதபுரம் மாவட்டம்: பரமக்குடி முத்தையா, ராமநாதபுரம் மணிகண்டன், திருவாடானை கருணாஸ்.
நெல்லை மாவட்டம்: சங்கரன்கோவில் அமைச்சர் ராஜலட்சுமி, அம்பாசமுத்திரம் முருகையா பாண்டியன், ராதாபுரம் இன்பதுரை, தென்காசி செல்வமோகன்தாஸ் பாண்டியன்.
மதுரை மாவட்டம்: மேலூர் பெரியபுள்ளான், மதுரை வடக்கு ராஜன் செல்லப்பா, மதுரை மேற்கு செல்லூர் ராஜு, திருப்பரங்குன்றம் ஏ.கே.போஸ், திருமங்கலம் ஆர்.பி.உதயகுமார், உசிலம்பட்டி நீதிபதி.
விருதுநகர், வேலூர்விருதுநகர் மாவட்டம்: ஸ்ரீவில்லிபுத்தூர் சந்திரபிரபா, சாத்தூர் சுப்ரமணியன், சிவகாசி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.
தேனி மாவட்டம்: ஆண்டிபட்டி தங்கதமிழ்ச்செல்வன், பெரியகுளம் கதிர்காமு, கம்பம் ஜக்கையன்.
வேலூர் மாவட்டம்: ஜோலார்பேட்டை அமைச்சர் கே.சி.வீரமணி, வாணியம்பாடி அமைச்சர் நிலோபர் கபில், அரக்கோணம் ரவி, சோளிங்கர் பார்த்திபன், கே.வி.குப்பம் லோகநாதன், ஆம்பூர் பால சுப்ரமணியம், குடியாத்தம் ஜெயந்தி பத்மநாபன்.
நாகை, தஞ்சைநாகப்பட்டினம் மாவட்டம்: வேதாரண்யம் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், பூம்புகார் பவுன்ராஜ், மயிலாடுதுறை ராதாகிருஷ்ணன், சீர்காழி பாரதி.
தஞ்சாவூர் மாவட்டம்: பாபநாசம் அமைச்சர் துரைக்கண்ணு, தஞ்சாவூர் ரங்கசாமி, பட்டுக்கோட்டை சேகர், பேராவூரணி கோவிந்தராசு.
சிவகங்கைசிவகங்கை மாவட்டம்: சிவகங்கை அமைச்சர் பாஸ்கரன், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.
அந்த மாவட்டத்தின் மானாமதுரை எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி அவரை சந்திக்க வந்திருந்தாலும், அவசர வேலை நிமித்தமாக சந்திக்காமல் சென்றுவிட்டதாக கூறப்பட்டது.
அவர்கள் தவிர வேறு பல மாவட்ட எம்.எல்.ஏ.க்களும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கைகளை தெரிவித்தனர்.
3 கோரிக்கைகள்முதல்–அமைச்சருடனான சந்திப்பு குறித்து எம்.எல்.ஏ. இன்பதுரையிடம் கேட்டபோது, ‘‘திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகாவை அமைக்க வேண்டும்; தாமிரபரணி–கருமேனியாறு–நம்பியாறு இணைப்பு திட்டத்தில் நிலம் கொடுத்தவர்களுக்கு கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்; கூடங்குளம் போராட்டம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் கைவிட வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகளை முன்வைத்தேன்’’ என்று தெரிவித்தார்.
சேலம் மாவட்டம்: சேலம் மேற்கு வெங்கடாசலம், சேலம் தெற்கு சக்திவேல், சங்ககிரி ராஜா, கெங்கவல்லி மருதமுத்து, ஆத்தூர் சின்னதம்பி, ஓமலூர் வெற்றிவேல், வீரபாண்டி மனோன்மணி, ஏற்காடு சித்ரா. (இந்த மாவட்டத்தில் முதல்–அமைச்சரின் தொகுதியான எடப்பாடியும் அடங்கும்).
இன்று 3–ம் நாளாக மற்ற மாவட்ட எம்.எல்.ஏ.க்களை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார்.