சசிகலா குடும்பத்தினரை நீக்காமல் அ.தி.மு.க. 2 அணிகளும் இணைவதற்கு சாத்தியம் இல்லை


சசிகலா குடும்பத்தினரை நீக்காமல் அ.தி.மு.க. 2 அணிகளும் இணைவதற்கு சாத்தியம் இல்லை
x
தினத்தந்தி 9 Jun 2017 3:27 AM IST (Updated: 9 Jun 2017 3:27 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வில், முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன், சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

சென்னை,

நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனே தொடருவார் என்று அமைச்சர்கள் கூறிவருகிறார்களே. அது பற்றி உங்கள் கருத்து என்ன?.

பதில்:– நாங்கள் அதை ஏற்கவில்லை. பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டது தவறு என்பது எங்களின் நிலைப்பாடு. அவரால் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எங்களுடைய நிலைப்பாடு இதுதான். என்றைக்கும் இது நான் எங்களது நிலைப்பாடு.

கேள்வி:– சசிகலா குடும்பத்தினரை கட்சிப் பதவியில் இருந்து நீக்காமல், அ.தி.மு.க. 2 அணிகளும் இணைவதற்கான சாத்தியம் இல்லையா?.

பதில்:– கண்டிப்பாக இல்லை.  இவ்வாறு அவர் கூறினார்.


Next Story