திருவள்ளூர் மாவட்டத்தில் 11–ந்தேதி நடக்கிறது அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணி ஆலோசனை கூட்டம்; ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு


திருவள்ளூர் மாவட்டத்தில் 11–ந்தேதி நடக்கிறது அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணி ஆலோசனை கூட்டம்; ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு
x
தினத்தந்தி 9 Jun 2017 4:23 AM IST (Updated: 9 Jun 2017 4:23 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணியை சேர்ந்த மாபா பாண்டியராஜன் எம்.எல்.ஏ., நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சென்னை,

திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டு விழா மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வேலப்பன்சாவடி கீதாஞ்சலி திடலில் வருகிற 11–ந்தேதி மாலை 4 மணியளவில் நடக்கிறது.

இந்த கூட்டத்துக்கு நான்(மாபா பாண்டியராஜன்) தலைமை தாங்குகிறேன். முன்னாள் முதல்–அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருந்திரளாக பங்கேற்க உள்ளனர்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story