எங்கள் அணியின் கோரிக்கைகளை, பழனிசாமி அணியினர் நிறைவேற்றவில்லை கே.பி. முனுசாமி குற்றசாட்டு
எங்கள் அணியின் கோரிக்கைகளை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினர் நிறைவேற்றவில்லை என ஓபிஎஸ் அணியை சேர்ந்த கே.பி. முனுசாமி குற்றஞ்சாட்டினார்.
சென்னை
சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் அ.திமு.க புரட்சி தலைவி அம்மா அணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மைத்ரேயன் எம்.பி., மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.இன்று முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து அவரது அணியில் இணைந்தார்.2 ஆயிரம் பேருடன் இன்று ஓ.பி.எஸ் அணியில் பரஞ்ஜோதி தன்னை இணைத்து கொண்டார்.
ஆலோசனை கூட்டத்திற்கு பின் முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
எங்கள் அணியின் கோரிக்கைகளை, பழனிசாமி அணியினர் நிறைவேற்றவில்லை. முதலமைச்சர் பழனிசாமி அணியினர் சசிகலாவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளனர்; அவர்கள் நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர்.
சசிகலாவை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்திருப்பதாக கூறி மக்களை அவர்கள் ஏமாற்றுகின்றனர்.
தினகரனை யாரும் சந்திக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்து இருந்தார். ஆனால் அவரது அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தினமும் தினகரனை சந்தித்து வருகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?
என கூறினார்.

Related Tags :
Next Story