விரைவில் 20 எம்.எல்.ஏ.க்கள் எங்கள் அணியில் இணைவார்கள் மதுசூதனன் பரபரப்பு பேட்டி
விரைவில் 20 எம்.எல்.ஏ.க்கள் எங்கள் அணியில் இணைவார்கள் என ஓ.பி எஸ். அணியை சேர்ந்த மதுசூதனன் கூறி உள்ளார்.
ராயபுரம்,
ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை மணிக்கூண்டு அருகில் அகில உலக அன்ன பூரணி அம்மா மகளிர் மன்றம் திறப்பு விழா நடந்தது.
அ.தி.மு.க. (புரட்சித் தலைவி அம்மா அணி) கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் மன்றத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தினகரன் பிடியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்டு செய்ய வேண் டும். சசிகலா தயவால் நிதி மந்திரி ஆன ஜெயக்குமார் தற்போது நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு விளம்பர வெறியர்.
இவர்கள் நடத்தும் நாடகத்தில் ஓ.பி.எஸ். சிக்க மாட்டார். விரைவில் 20 எம்.எல்.ஏ.க்கள் எங்கள் அணியில் இணைவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் ஆர்.எஸ். ராஜேஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story