ஜெயலலிதாவின் இல்லத்திற்குள் செல்ல ஜெ.தீபாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு
சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் இல்லத்திற்குள் செல்ல ஜெ.தீபாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
சென்னை,
சென்னை போயஸ் கார்டன் இல்லத்திற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா திடீரென வந்து உள்ளார்.
போயஸ் தோட்டத்திற்கு சென்ற ஜெ.தீபா ஜெயலலிதாவின் இல்லத்திற்குள் செல்ல அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
தீபாவின் கணவர் மாதவனும் போயஸ் தோட்டத்திற்கு வந்து உள்ளார்.
என் சகோதரர் தீபக் அழைத்ததால் போயஸ் கார்டன் வந்தேன், ஜெயலலிதா படத்திற்கு பூஜை செய்ய தீபக் தான் அழைத்தார் என ஜெ. தீபா கூறிஉள்ளார். போயஸ் கார்டன் இல்லம் அருகே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
தினகரன் தரப்பினர் உள்ளே செல்லவிடாமல் தடுப்பதாக தீபா தரப்பினர் குற்றம் சாட்டிஉள்ளனர். செய்தியாளர்கள் உள்ளே செல்வதற்கு அனுமதி கிடையாது என போலீஸ் தடுத்து நிறுத்தி உள்ளது.
Related Tags :
Next Story