இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்- அமைச்சர் ஜெயக்குமார்


இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்- அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 12 Jun 2017 6:27 AM GMT (Updated: 12 Jun 2017 6:27 AM GMT)

இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

சென்னை,

அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. அணிகள் இணைய வேண்டும் என்று பொதுமக்களும், கட்சியினரும் விரும்புகிறார்கள். எனவே இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அந்த முடிவில் மாற்றம் எதுவும் இல்லை.ஒரே அணியாக செயல்படுவதற்கான முயற்சிகள் தொடர்கின்றன.

ஏன் பேச்சுவார்த்தை குழு கலைக்கப்பட்டது என்பதை பன்னீர்செல்வம் தான் விளக்க வேண்டும்.தீபா, போயஸ் கார்டன் வந்த சம்பவம் குறித்து முழுமையாக தெரிந்துகொண்டு பதில் கூறுவேன். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

Next Story