ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் ஆதரவு


ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் ஆதரவு
x
தினத்தந்தி 13 Jun 2017 4:15 AM IST (Updated: 12 Jun 2017 8:55 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், அவரது கணவர் கோபால் ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

சென்னை,

அ.தி.மு.க.(புரட்சித் தலைவி அம்மா) பொருளாளரும், முன்னாள் முதல்–அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் திருவேற்காடு அருகே உள்ள வேலப்பன்சாவடியில் நடைபெற்ற மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை குழு கலைக்கப்படுவதாக அறிவித்தார்.

அதை தொடர்ந்து, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் நேற்று காலையில் அவைத்தலைவர் இ.மதுசூதனன், மைத்ரேயன் எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், கே.பாண்டியராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இதே போன்று உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த கணேசம் மிஸ்ரா தலைமையில் ராஜ்கபூர் உபதயா, ராஜ்குமார் திவாரி, மகேந்திரசிங் பட்டேல் உள்பட பல நிர்வாகிகளும் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.


Next Story