தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு தொடங்கப்படும்? எடப்பாடி பழனிசாமி பதில்
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு தொடங்கப்படும்? என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து உள்ளார்.
சென்னை,
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க மத்திய அரசு முடிவு செய்து அறிவித்தது. அதற்காக செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தஞ்சாவூர், பெருந்துறை, மதுரை ஆகிய இடங்கள் தேர்வு செய்யப் பட்டன.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாவிட்டால் எனது பதவியை ராஜினாமா செய்வேன் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் . மேலும் மதுரை மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள் என மிரட்டல் விடுத்தார்.
இதற்கிடையே, அமைச்சர் துரைக்கண்ணு கூறுகையில் தஞ்சாவூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்து இருந்தார்.
எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் 2 அமைச்சர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் நாட்டில் எய்ம்ஸ் மருத்துவ மனை எந்த இடத்தில் அமைக்கப்படும்? என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர் “தமிழ் நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து முடிவெடுக்கும். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 5 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கும் என்றார்.

Related Tags :
Next Story