தமிழக என்ஜினீயரிங் கல்லூரிகளின் தேர்ச்சி சதவீதம் வெளியீடு 3 கல்லூரிகளில் யாரும் தேர்ச்சி பெறவில்லை
தமிழகத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளின் தேர்ச்சி சதவீதத்தை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது.
சென்னை,
தமிழகத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளின் தேர்ச்சி சதவீதத்தை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. இதில் 3 கல்லூரிகளில் யாரும் தேர்ச்சி பெறவில்லை.
கலந்தாய்வு
தமிழகத்தில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கையை கலந்தாய்வு மூலம் அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு என்ஜினீயரிங் சேர்க்கைக்கு மாணவ-மாணவிகள் 1 லட்சத்து 40 ஆயிரத்து 451 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
மாணவ-மாணவிகள் கல்லூரிகளை தேர்வு செய்ய கடந்த ஆண்டு கட்-ஆப் மதிப்பெண் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஆனால் அந்த கல்லூரிகளின் தேர்ச்சி சதவீதம் என்ன? என்பது அவர்களுக்கு தெரியாத நிலை இருந்தது. எனவே கல்லூரிகளின் தேர்ச்சி சதவீதத்தை வெளியிட அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு வெளியிட்டு இருந்தது.
தேர்ச்சி சதவீதம் வெளியீடு
அதன்படி அண்ணா பல்கலைக்கழகம் கல்லூரிகளின் தேர்ச்சி சதவீதத்தை நேற்று வெளியிட்டது. அதில், அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளில் 2016 ஏப்ரல், டிசம்பரில் செமஸ்டர் தேர்வுகளுக்கு எத்தனை மாணவர்கள் அனுப்பப்பட்டனர்?, அவர்களில் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றனர்?, தேர்ச்சி சதவீதம் உள்ளிட்ட விவரங்கள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் ( www.coe.an-n-au-n-iv.edu) வெளியானது.
2016 டிசம்பர் மாத தேர்வு முடிவுகளின் அடிப்படையில் முதல் 10 இடங்களை பிடித்த என்ஜினீயரிங் கல்லூரிகள் விவரம் வருமாறு:- (தேர்ச்சி சதவீதம் அடைப்புக்குறியில் உள்ளது)
முதல் 10 இடங்கள்
1. இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆப் ஹேண்ட்லூம் டெக்னாலஜி கல்லூரி- சேலம் (94.74).
2. பி.எஸ்.ஜி. இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜி அன்ட் அப்ளைடு ரிசர்ச்- கோவை (94.65).
3. வி.எஸ்.பி. என்ஜினீயரிங் கல்லூரி- கரூர் (93.47).
4. ராம்கோ இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜி- விருதுநகர் (92.69).
5. கே.ராமகிருஷ்ணன் என்ஜினீயரிங் கல்லூரி- திருச்சி (91.48).
6. ஸ்ரீசாய்ராம் இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜி- காஞ்சீபுரம் (91.16).
7. ஸ்ரீசாய்ராம் என்ஜினீயரிங் கல்லூரி- காஞ்சீபுரம் (90.32).
8. சாரநாதன் என்ஜினீயரிங் கல்லூரி- திருச்சி (90.09).
9. வேலம்மாள் இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜி- திருவள்ளூர் (89.47).
10. கொங்குநாடு என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் டெக்னாலஜி- திருச்சி (87.97).
கடைசி 10 இடங்கள்
கடைசி 10 இடங்களை பிடித்த என்ஜினீயரிங் கல்லூரிகள் விவரம் வருமாறு:-
1. கணபதி செட்டியார் என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் டெக்னாலஜி- ராமநாதபுரம் (09.75).
2. தமிழன் என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் டெக்னாலஜி- கன்னியாகுமரி (09.58).
3. ஸ்ரீரமண மகரிஷி என்ஜினீயரிங் கல்லூரி- திருவண்ணாமலை (08.88).
4. அர்ச்சனா இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜி- கிருஷ்ணகிரி (07.58).
5. உடையப்பா என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் டெக்னாலஜி- தேனி (07.46).
6. கே.கே.சி. என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் டெக்னாலஜி- அரியலூர் (05.83).
7. லார்டு வெங்கடேஸ்வரா என்ஜினீயரிங் கல்லூரி- காஞ்சீபுரம் (05.59).
8. ஏ.ஆர்.எஸ். என்ஜினீயரிங் கல்லூரி- காஞ்சீபுரம் (03.20).
9. ஆக்ஸ்போர்டு என்ஜினீயரிங் கல்லூரி- திருவண்ணாமலை (03.14).
10. ஜோ சுரேஷ் என்ஜினீயரிங் கல்லூரி- நெல்லை (0)
லார்டு அய்யப்பா இன்ஸ்டிட்டியூட் ஆப் என்ஜினீயரிங் மற்றும் டெக்னாலஜி- காஞ்சீபுரம் (0),
நைட்டிங்கேல் இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜி- கோவை (0).
கடைசி 3 இடங்களில் உள்ள கல்லூரிகளில் யாருமே தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தள்ளிப்போகுமா?
2016 ஏப்ரலில் 516 என்ஜினீயரிங் கல்லூரிகள் இருந்தன. ஆனால் அதே ஆண்டு டிசம்பரில் 506 கல்லூரிகள் மட்டுமே தேர்வை சந்தித்தன. இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், 10 கல்லூரிகளில் சில கல்லூரிகள் சுயாட்சி அந்தஸ்து பெற்றிருக்கலாம். சில கல்லூரிகள் மூடப்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர்.
அண்ணா பல்கலைக்கழக ரேண்டம் எண் 20-ந்தேதியும், ரேங்க் பட்டியல் 22-ந்தேதியும் வெளியிடப்பட உள்ளது. கலந்தாய்வு 27-ந்தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. மருத்துவ கலந்தாய்வு தள்ளிப்போவதால் என்ஜினீயரிங் கலந்தாய்வும் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது.
தேர்ச்சி சதவீதம் வெளியிட்டதின் காரணமாக மாணவ- மாணவிகள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வில் பங்கேற்று என்ஜினீயரிங் கல்லூரிகளை தேர்ந்து எடுக்க வசதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story