17 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண் கைது


17 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண் கைது
x
தினத்தந்தி 16 Jun 2017 1:11 AM IST (Updated: 16 Jun 2017 1:11 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் 17 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை,

நெல்லை ராமையன்பட்டி சிவாஜி நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 33) கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி முத்துமாரி (26). இவர்களுக்கு 2½ வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் சங்கர் வெளியூர் மற்றும் கேரளாவுக்கு சென்று வேலை செய்து வந்தார்.

கடந்த 5-ந் தேதி சங்கர் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது மனைவி மற்றும் குழந்தையை காணவில்லை. இதுகுறித்து சங்கர் மானூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், முத்துமாரி அந்த பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. சங்கர் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் முத்துமாரிக்கும், அந்த சிறுவனுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் வீட்டை விட்டு வெளியேறியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இளம்பெண் கைது

இது தொடர்பான வழக்கு மானூர் போலீஸ் நிலையத்தில் இருந்து நெல்லை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் முத்துமாரி, தன்னுடைய குழந்தையுடன் மகளிர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துமாரியை கைது செய்தனர். குழந்தையை சங்கர் வசம் ஒப்படைத்தனர். மேலும் முத்துமாரியுடன் சென்றிருந்த சிறுவனை பிடித்து காப்பகத்தில் சேர்த்தனர். 

Next Story