செங்குன்றத்தில் 71 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்


செங்குன்றத்தில் 71 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
x
தினத்தந்தி 17 Jun 2017 2:11 PM IST (Updated: 17 Jun 2017 2:11 PM IST)
t-max-icont-min-icon

செங்குன்றத்தில் ரூ.71 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்தனர்.

சென்னை

மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர்  செங்குன்றத்தில் உள்ள தனியார் கிடங்கில் சோதனை நடத்தினர். அப்போது  11 கிலோ மெத்தா பெட்டமைன், 90 கிலோ ஹெராயின், 56 கிலோ சூடோபெட்ரின் ஆகிய போதைப்பொருள்களை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதானவர்களில் ஒருவர் மலேசியாவை சேர்ந்தவர் ஆவார்.


Next Story