210 நாட்கள் பள்ளிகள் இயங்கும் பள்ளிகளுக்கான ஆண்டு செயல் திட்டம் வெளியீடு


210 நாட்கள் பள்ளிகள் இயங்கும் பள்ளிகளுக்கான ஆண்டு செயல் திட்டம் வெளியீடு
x
தினத்தந்தி 17 Jun 2017 10:45 PM GMT (Updated: 17 Jun 2017 8:09 PM GMT)

பள்ளிகளுக்கான ஆண்டு செயல் திட்டம் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் நடப்பு கல்வி ஆண்டில் 210 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கான நடப்பு ஆண்டு செயல் திட்டத்தை (2017-2018) தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.

கடந்த 7-ந் தேதி பள்ளிகள் திறந்தது முதல் கல்வி ஆண்டு முடியும் வரை எத்தனை நாட்கள் பள்ளிகள் இயங்கும்? என்னென்ன நாட்களில் விடுமுறை?, தேர்வு எப்போது?, அந்தந்த மாதங்களில் பள்ளிகளில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் என்ன? ஆகியவை குறித்து அதில் இடம்பெற்றுள்ளது.

அதேபோல், 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு எந்தெந்த தேதியில் தேர்வுகள் நடைபெறும்? என்பது அடங்கிய தேர்வு அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.

Next Story